புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. 

அதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முசாபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலை இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந் நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பிரதமர் மோடிக்கும் இந்திய ராணுவப்படைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ள விஜயகாந்த், பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், பிரதமர் @narendramodi அவர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
#IndianAirForce இவ்வாறு பதிவிட்டுள்ளார்.