Vijay Diwas 2023: இன்று ''விஜய் திவாஸ்''! அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன?

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது
 

Vijay Diwas is a day of commemoration for India's victory over Pakistan in the 1971 war dee

கடந்த 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் எனும் தேசம் உருவாக இந்திய ராணுவம் காரணமாகஅமைந்தது.

இதே நாளில், வங்கதேசத்தில் பிஜோய் திவாஸ் என்ற பெயரில், ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.

விஜய் திவாஸ் வரலாறு

கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் செங்கிஸ்கான் எனும் ஆப்ரேஷனை செயல்படுத்தி இந்தியாவின் 11 விமானநிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 13 நாட்கள் நடந்த இந்த போரில் இந்திய ராணுவத்தின் வீரத்தையும், துணிச்சலையும், தீரத்தையும் எதிர்கொள்ள முடியாமல் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது.

ஏறக்குறைய 93,000 படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அமிர் அப்துல்லா கான் நைஜி, இந்திய ராணுவத்திடமும், வங்கதேசத்தின் முக்கி வாகினினியிடம் சரணடைந்தமைக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.உலகளவிலும், ஆசியப் பிராந்தியத்திலும் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்க இந்த போர் வெற்றி முக்கியமானதாகஅமைந்தது.

இந்த போரில் இந்தியா சார்பில் 3900 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், 9,851 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவூட்டும் விதத்தில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது

முக்கியத்துவம் என்ன

இந்தியாவின் மக்களையும், தேசத்தையும் காக்க ராணுவத்தின் போராட்டமும், போர்புரிந்த வீரச் செயலும் போற்றுதற்குரியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பெற்ற வெற்றியும், அதனால் வங்கதேசம் எனும் தேசம் உருவானதையும் கொண்டாடும் வகையில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios