Asianet News TamilAsianet News Tamil

50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது…. ரிவர்ஸ் அடிக்கும் வெங்கையா நாயுடு

vengiah naidu
Author
First Published Dec 28, 2016, 6:46 AM IST


50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது….

 ரிவர்ஸ் அடிக்கும் வெங்கையா நாயுடு

கருப்பு பண ஒழிப்பை 50 நாட்களில் ஒழிக்க முடியாது என்று  என்று மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி 50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழித்து விடுவேன் என்று கூறி வரும் நிலையில், மத்தியஅமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் 50 நாட்களில் சாத்தியமற்றது என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 -ந் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதனிடையே மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் செபாசிட் செய்து வருகின்றனர். இருப்பினும் பண தட்டுப்பாட்டினால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு நிலைமை 50 நாட்களுக்குள் சீரடையும் என்றார். ஆனால், இன்னும் நிலைமை சீராகவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணமதிப்பு இழப்பு விவகாரத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், நிலைமை வெகு விரைவில் நிலமை சீராகும். வருமான வரித்துறை சோதனையில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லை. மத்திய அரசுக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித்துறை சோதனை சரியான முறையில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ராகுல் காந்தி ஆதாயம் தேடுவதாகவும், ராமமோகன ராவ் தேவையற்ற பிரச்சினைகளை எழுப்புகிறார். கருப்புபணத்தை 50 நாட்களில் ஒழித்து விடுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. அதற்கு நீண்ட நாட்களாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios