"இந்தியா மீது கை வெச்சு பாருங்க" ... வேற லெவலில் வாய்ஸ் கொடுத்த வெங்கய்ய நாயுடு...!  

இந்தியா மீது தாக்குதல் நடத்த யாராவது முயற்சி செய்தாலே அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு தக்க பதிலடி கண்டிப்பாக கொடுக்கப்படும் என வெங்கைய நாயுடு அதிரடியாக பேசியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா எந்த நாடு மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது. ஆனால் வெளி நாட்டினர் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அவர்களில் யாராவது இந்தியா மீது மீண்டும்  தாக்குதல் நடத்தினால் அவர்களது வாழ்நாளில் மறக்கமுடியாத பதிலடி கண்டிப்பாக கொடுக்கப்படும். அது மட்டுமல்ல... நமது அண்டை நாடுகளில் ஒன்று தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதும் தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளித்து வருவதுமாக உள்ளது. 

மனிதகுலத்திற்கு சேதம் விளைவிக்கும் இப்படி ஒரு  தாக்குதலின் விளைவு தெரியாமல் மீண்டும் இந்த தாக்குதல் அவர்களுக்கே திருக்கும் என்பது கூட உணராமல் செயல்பட்டு வந்தால் பின்விளைவு அவர்களுக்கு தான் ... இதனை இப்போது உணர்ந்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார் வெங்கைய நாயுடு.

இந்தியா எந்த ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது. ஆனால் அதே போன்று காஷ்மீர் விவகாரத்தில் வேறு யாரும் தலையிட மாட்டார்கள் என நம்புகிறோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என உறுதியாக தெரிவித்தார் வெங்கய்ய நாயுடு.