vehicle insurece hike from april 1 st

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் வாகனங்களுக்காக இன்சூரன்ஸ் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை மறுநாள் ஏபரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.



350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ளவாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.