vattal nagaraj withdraw protest against sathyaraj
பாகுபலி 2 திரைப்படத்திற்கு எதிராக கன்னட சலுவாளி அமைப்பினர் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதி நீர் விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கர்நாடகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் கன்னடர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்த நடிகர் சத்யராஜூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் நடித்த பாகுபலி 2 திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கர்நாடகவில் போராட்டம் வெடித்தது.

கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்ததால் பாகுபலி 2 வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக சத்யராஜ் நேற்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் பாகுபாலி 2 படத்திற்கு எதிராக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் நடிகர் சத்யராஜ் கவனமுடன் பேச வேண்டும் என்றும், சத்யராஜ் மன்னிப்பு கோரியதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
