Asianet News TamilAsianet News Tamil

நாடு முழுவதும் 100 ஆறுகளில் கரைக்கப்படும் வாஜ்பாய் அஸ்தி!

டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 00 ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது.

Vajpayee's ashes will be immersed in various rivers across the country
Author
Delhi, First Published Aug 19, 2018, 12:52 PM IST

சுதந்திரப் போராட்டத் தியாகியும்  முன்னாள் பிரதமரும் பா.ஜனதாவின் முதுபெரும் தலைவருமான  வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

ஹரித்வாரில் கரைக்கப்படுவது போல் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளிலும் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கடவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமையகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்துகள் அளவில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை கூட்டங்களை பா.ஜ.கவினர் நடத்துகின்றனர்.

Vajpayee's ashes will be immersed in various rivers across the country

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.

இந்நிலையில், டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 00 ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படடுகிறது. விமான நிலையத்தில் இருந்து உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் வாஜ்பாயின் அஸ்தி கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஹரித்வார் நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் நாளை  நடைபெறுகிறது. இதனையடுத்து, உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் நகருக்கு கொண்டு செல்லப்படும் வாஜ்பாயின் அஸ்தி அங்குள்ள சாந்தி கஞ்ச் ஆசிரமத்தில் நாளை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.  பின்னர் கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

Vajpayee's ashes will be immersed in various rivers across the country

 இதை அடுத்து தமிழகத்திற்கு அஸ்தியை கொண்டு வருவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக பாராளுமன்ற உறுப்பினர் இல. கணேசன் உள்ளிட்டவர்கள் டெல்லியில் சென்றுள்ளனர்.   நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்களின் அஞ்சலிக்கு பின்னர்  சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், மதுரையில் வைகை ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு, கோவையில் பவானி ஆறு, கன்னியாகுமரி கடல் ஆகிய இடங்களில் கரைக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios