உத்தரபிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்டோர் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் வேன் மோதியது. இதில், வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 8 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேருக்கு அம்மாமாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.