இந்திய மக்கள் பாக்கெட்டில் ஏ.டி.எம். கொண்டு சேர்க்கும் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் உருவாக்கி இந்திய மாணவி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி ஸ்பிரிகா பண்டாரி. மற்றும் சில மாணவர்களும் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.‘பாக்கெட் சேஞ்ச்‘ என அழைக்கப்படும் இந்த செயலி டிஜிட்டல் முலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய செயலி உண்மையில் ஒரு சாட் பாட் ஆகும். இந்த ஆப் பண பரிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தினசரி வாழ்விற்கு குறைந்த பட்ச வருவாய் ஈட்டும் மக்களுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. என பண்டாரி தெரிவித்துள்ளார்.

'ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களது வருவாயினை மிக எளிமையாகவும், நம்பகத்தன்மையுடனும் பணத்தை டிஜிட்டலாகவும், பின் இதேபோன்று டிஜிட்டலில் இருந்து பணமாகவோ மாற்ற இந்த ஆப் வழி செய்யும்,' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'முதலில் டிஜிட்டல் கடன் உக்கப்படுத்தும் விதமான ஆப்ஸ் உருவாக்க ஆரம்பித்து, பின் பாக்கெட் சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கியுள்ளோம். சுமார் ஆறு மாத காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஸ் பணத்தின் புகைப்படங்களுக்கு கூகுள் விஷன் பயன்படுத்தப்பட்டதாக,' மாணவி பண்டாரி தெரிவித்துள்ளார்.

புதிய ஆப்ஸ் எவரையும் மற்றவர்களுக்கு ATM. போன்று செயல்படவைக்கும் திறன் கொண்டுள்ளது. டிஜிட்டல் பணத்தை நிஜ பணமாக மாற்ற இந்த ஆப்ஸ் உதவும். மேலும் இவ்வாறு செய்யும் போது பரிமாற்றத்தில் கலந்து கொள்வோர் தங்களது பணத்தை வங்கி கணக்கில் சேர்த்து அதற்கான வட்டியை பெற முடியும்.

பணத்தை வங்கியில் செலுத்துவோர் மற்றும் வங்கியில் இருந்து பணத்தை எடுப்போரை இணைக்கும் முயற்சியில் ATM இல்லாத இடங்களில் பண பரிமாற்றம் செய்ய வைப்பதே இந்த ஆப்ஸ்-ன் நோக்கம் என இந்த ஆப்ஸ்  உருவாக்கியவர்களில் ஒரு மாணவரான கட்லர் தெரிவித்துள்ளார்.