Asianet News TamilAsianet News Tamil

பண மதிப்பிழப்பு நடவடிக்கை….நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் உர்ஜித் பட்டேல்…

urgith patel-explain-the-demonetisation
Author
First Published Dec 19, 2016, 8:23 AM IST


பண மதிப்பிழப்பு நடவடிக்கை….நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் உர்ஜித் பட்டேல்…

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து நாமு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் கள் முறையாக செயல்படாததால் பொது மக்கள் பணத்திற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரவும், கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமரும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்,

ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராகும், ரிசர்வ் வங்கி கவர்னர் இப்பிரச்சனை குறித்து விளக்கமளிக்கிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிக் கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோதும் இப்பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios