UP Board Exams 2022: உத்தரபிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு பிற்பகல் நடக்கவிருந்த நிலையில் வினாத்தாள் முன்னதாக கசிந்ததால், 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
UP Board Exams 2022: உத்தரபிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு பிற்பகல் நடக்கவிருந்த நிலையில் வினாத்தாள் முன்னதாக கசிந்ததால், 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்ரா, மணிபுரி, மதுரா, அலிகார்,காசியாபாத, உன்னோவ், வாரணாசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று நடவிக்கருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் பள்ளிகளில் மார்ச் 24 முதல் தேர்வுகள் நடந்து வருகிறது. உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் 12 வேலை நாட்களிலும் இடைநிலைத் தேர்வுகள் 15 வேலை நாட்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் தேர்வுகளுக்கு 51,92,689 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் மொத்தம் 27,81,654 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளனர். அதே போல் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு 24,11,035 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 10,86,835 மாணவிகளும் மற்றும் 13,24,200 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு பிற்பகல் நடக்கவிருந்த நிலையில் வினாத்தாள் முன்னதாக கசிந்ததால், 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆணையர்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் எஸ்எஸ்பிகளுடன் காணொளி வழியாக நடத்திய அலோசனையில், சில உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வுகள் நடக்கும் அந்தெந்த மாவட்டங்களில் தேர்வு எழுதும் மையங்களில் சோதனை நடத்த மண்டல நீதிபதிகள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.
தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த தேர்வு அடுத்த மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வானது காலை 8 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
