நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை  ‘ஜன் அவுஷதி’ ஜெனரிக் மருந்துக்களை கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன்சேவை நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்து. இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்பனையைத் தவிர்த்து, மருந்துகளும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் உதவியின் மூலம், ‘ஜன்அவுஷதி’ ஜெனரிக் மருந்துக்கடைகளை மலிவு விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே பெட்ரோல் நிலையங்களில் எல்.இ.டி. பல்புகளும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள், 55 ஆயிரம் பெட்ரோலிய நிலையங்களில் விற்பனை செய்யப்படும். இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோலிய நிலையங்களில் இந்த எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.