விவசாயிகளின் போராட்டத்தில் கார்களை விட்டு மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் கார்களை விட்டு மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய அர்சின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஓராண்டாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், தற்போது போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அரியானாவில் நெல் கொள்முதலை தாமதப்படுத்தும் பா.ஜ.க. அரசை கண்டித்து இரண்டு நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளை தடியடி நடத்தி கலைத்த போலீஸ், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியடித்தது.

இந்தநிலையில் அரியானா விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் கருப்புக் கொடிகளை ஏந்தி பேரணி சென்றனர். லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் திடீரென கார்களை விட்டு மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் மீது மோதிய கார்களில் மத்திய அமைச்சர் அஜய் தேனியின் மகனுடைய காரும் ஒன்றாகும். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மூன்று கார்களை தீயிட்டுக் கொளுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸாரும் தடியடி நடத்தியதால் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
