65 ஆண்டுகளாக காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ 65 ஆண்டுகளாக காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை பொய்யான தாக்கத்துடன் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் கே.சி.ஆரின் தலைமையும் இதே போக்கையே காட்டியுள்ளது. இந்தக் கேள்விகளைக் கேட்பது அவசியம். மாநிலத்தில் எத்தனை தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

Scroll to load tweet…

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றிகரமாக செய்தது போல் தெலுங்கானாவை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும்” என்று தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள பூத் தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களிடையே பேசினார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!