தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பெரிய உதவி புரியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கையும், பாராட்டும் தெரிவித்தார்

தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பெரிய உதவி புரியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கையும், பாராட்டும் தெரிவித்தார்

பட்ஜெட் 2022-23ம் ஆண்டுக்கானபட்ஜெட் குறித்த சாதகமான தாக்கம் குறித்த கருத்தரங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்த 2022-23ம் நிதியாண்டு பட்ஜெட் பெருஉதவியாக இருக்கும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கும் முடிவின் மூலம் கல்விநிலையங்களில் மாணவர்கள் படிப்பதற்கான இடப்பற்றாக்குறை தீர்க்கப்படும்.

கல்வித்துறை தொடர்பாக 5 அம்சங்களை பட்ஜெட் கொண்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தல், திறன்மேம்பாடு, நகரவடிவமைப்பு மற்றும் திட்டமிடல், சர்வதேசமயமாக்கல், இனிமேஷன் விஷுவல் எபெக்ட்ஸ் கேமிங் காமிக்(ஏபிஜிசி) ஆகியவையாகும்

உலகளவில் பெருந்தொற்று இன்னும் குறையாமல் இருக்கும் இந்த நேரத்தில் கல்வித்துறையை டிஜிட்டல் மயத்தில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. புதுமைகளை இன்னும் நாம் கொண்டுவருவதை உறுதி செய்ய வேண்டும். 

கல்விக்கட்டமைப்பான இ-வித்யா, ஒருவகுப்பு ஒரு சேனல், டிஜிட்டல் லேப்,டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவை இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பெருமளவு உதவும். தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த, பட்ஜெட் உதவி புரியும். 

குழந்தைகளின் மனவளர்ச்சி சீராக இருக்க, தாய்மொழியில் கல்வி கற்பது அவசியம். மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்விகூட பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

பட்ஜெட்டில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது தனித்துவமானது, இதுவரை எடுக்கப்படாத நடவடிக்கையாகும். நம்முடைய தேசத்தில் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்பதை முழுமையாக தீர்க்கும் வலிமை டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு இருப்பதாகப் பார்க்கிறேன்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்