பிஸியான பெங்களூரு.. செக்யூரிட்டி கூட இல்ல - மொத்த குடும்பத்துடன் ஜாலியாக வலம் வந்த UK PMன் மனைவி அக்ஷதா!
Akshata Murty : லண்டன் நகரின் முதல் பெண் குடிமக்களாக விளங்கும் அக்ஷதா மூர்த்தி அவர்கள் அண்மையில் பெங்களுருவில் தனது குடும்பத்துடன் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராகவேந்திர மடத்தில் தங்கள் மகளும் இங்கிலாந்தின் முதல் பெண்மணியுமான அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது மகள்கள் அனுஷ்கா மற்றும் கிருஷ்ணா ஆகியோருடன் காணப்பட்டனர். அவர்களது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இணையத்தில் வைரலாக அந்த வீடியோவில் அவர்கள் அந்த மடத்தில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிகின்றது. அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் இருபவருடைய குடும்பம், ஒரு பாதுகாப்பு கூட இல்லாமல் சாதாரண உடையில் மடத்தில் புத்தகங்களைச் பார்த்து தங்கள் நேரத்தை செலவழிப்பதைக் காண முடிந்தது.
அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் Gulf Ticket! தமிழர் உள்பட 667 பேருக்கு அடித்த ஜாக்பாட்!
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மூர்த்தி குடும்பத்தினர் அவர்களின் இந்த எளிமைக்காக பாராட்டுகளைப் பெறுவது இது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது தந்தை நாராயண மூர்த்தியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. படத்தில், தந்தை-மகள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு பிரபலமான கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைக் காண முடிந்தது.
இந்த மாதம், திருமதி அக்ஷதா தனது பெற்றோருடன், எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகருணியின் சமீபத்திய புத்தகமான 'ஒரு அசாதாரண காதல்: தி எர்லி லைஃப் ஆஃப் சுதா மற்றும் நாராயண மூர்த்தி' வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இந்தியாவுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான பிறகு திரு. சுனக் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
39 நாணயங்கள், 37 காந்தங்களை விழுங்கிய நபர்! பாடி பில்டிங் ஆசையால் நடந்த விபரீதம்!