இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள காட்டாக்கடை நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது, எதிர் எதிர் திசையில் இருந்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

Two-wheeler head-on collision... cctv footage release

திருவனந்தபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாளது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள காட்டாக்கடை நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது, எதிர் எதிர் திசையில் இருந்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனமும் சுக்கு நூறாக நொறுங்கியது. 

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்தத இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காட்டக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தில் சிக்கிய பைக்குகள் சுக்கு நூறாக நொறுங்கும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios