டாட்டூ போட்டால் எய்ட்ஸ் வருமா.. மருத்துவர்களை அதிரவைத்த நோயாளிகள் - மக்களே உஷார் !

டாட்டூவை பாதுகாப்பாக போட வேண்டும் என்று அடிக்கடி நிபுணர்கள் அறிவுரை கூறிவருகின்றனர்.

Two People Test Positive For HIV After Getting Tattoos in Uttar Pradesh shocked

இன்றைய காலக்கட்டத்தில் பிரேக்கப்பிற்கு பிறகு காதலன் அல்லது காதலின் பெயர் உள்ள டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் தற்போதைய இளம் தலைமுறையினர் எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். 

Two People Test Positive For HIV After Getting Tattoos in Uttar Pradesh shocked

இப்படிப்பட்ட டாட்டூவை பாதுகாப்பாக போட வேண்டும் என்று அடிக்கடி நிபுணர்கள் அறிவுரை கூறிவருகின்றனர். இருந்தும் சில இடங்களில் தவறுகள் ஏற்படத்தான் செய்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 25 வயது பெண் உட்பட 14 பேர் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளித்த போதிலும் குணமாகவில்லை. வைரஸ், டைபாய்டு, மலேரியாவுக்கான சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எதுவும் பலன் தரவில்லை, காய்ச்சலும் குறையவில்லை. இதையடுத்து ஹெச்ஐவி பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர். முதலில் மறுத்த அவர்கள், நீண்ட ஆலோசனைக்கு பிறகு பரிசோதனைக்கு சம்மதித்துள்ளனர். சோதனை முடிவில் மருத்துவர்களும், அவர்களும் பயந்ததுபோலவே ஹெச்ஐவி பாதிப்பு உறுதியானது.

Two People Test Positive For HIV After Getting Tattoos in Uttar Pradesh shocked

இதுகுறித்து அந்த இளைஞர் கூறியபோது, ‘எனக்கு 20 வயதே ஆகிறது. யாருடனும் உடலுறவு கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டு இதுவரை மற்றவர்கள் ரத்தத்தைகூட ஏற்றவில்லை. அப்படி இருந்தும் ஹெச்ஐவி பாதிப்பு எப்படி வந்தது எனத் தெரியவில்லை என்று அந்த இளைஞர் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட இருவர் உடலிலும் பச்சை குத்தியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இருவருமே சமீபத்தில் தான் பச்சை குத்திக்கொண்டதும் ஒரு பொதுவான விஷயமாக இருப்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios