two leaf case accust sugesh santhiraa enjoyed his life with bollywood actre
தேர்தல் ஆணையம் முடக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தை பெருவதற்கு இடைத்தரகர்கள் முலம் லஞ்சம் பெறப்பட்டதாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இடைத்தரகர் சுகேஷ்சந்திராவை கைது செய்து விசாரணை நடத்திய போது தினகரன் பணம் கொடுத்ததாக வாக்குமுலம் கொடுத்தார்.
மேலும் தினகரனிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் பாலிவுட் துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருந்ததாகவும் நட்சத்திர ஓட்டல்களில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியதாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார் என்று தெரிகிறது.
இதையடுத்து போலீசார் தினகரனை கைது செய்து விசாரணை செய்து இன்று சிறையில் அடைத்தனர். டெல்லி போலீசார் தினகரனை ஆஜர்படுத்தி விட்டு பெருமுச்சுடன் தனது அலுவலகத்திற்கு வந்தனர்.
மேலும் நாளைமுதல் இந்த வழக்கில் வேறு யார் தொடர்பில் உள்ளார்கள் என்ற விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
