Asianet News TamilAsianet News Tamil

Lock Down : ஒமிக்ரான் வைரஸ் - இரண்டு நாட்கள் ஊரடங்கு… அரசு அறிவிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு ..

ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் இரண்டு நாட்கள் ஊரடங்கினை அரசு அறிவித்து இருக்கிறது.

Two days lockdown govt announcement important update
Author
India, First Published Dec 11, 2021, 9:51 AM IST

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் 20ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கிய நிலையில் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள எல்லா விமான நிலையங்களும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது.

Two days lockdown govt announcement important update

குஜராத்தில் 3 பேர் , ராஜஸ்தானில் 9 பேர், கர்நாடகாவில் 2 பேர்,  மகாராஷ்டிராவில் 17 பேர்,  டெல்லியில் ஒருவர் என இந்தியாவில் மொத்தம் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை 27 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரேநாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3 பேர் மும்பையும்,  4 பேர் பிம்ரி பகுதியையும் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Two days lockdown govt announcement important update

இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் இன்று மற்றும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊர்வலம், பேரணி, சமூக கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios