tv serial in train

ரயிலில் பயணம் செய்துக்கொண்டே டிவி சீரியல், திரைப்படங்கள், ரேடியோ என அனைத்து சேவையை வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, ஸ்மார்ட்போன், லேப்டாப், போன்றவற்றில் ரயில் பயணம் செய்யும் போதே, ரேடியோ, டிவி சீரியல் என அனைத்தும் பார்க்கும் வசதியை அடுத்த மாதம் முதல் வழங்க ரயில்வே துறை திட்டம் போட்டுள்ளது.

ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, பிற வருவாய் மூலம் எப்படி வருமானத்தை ஈட்டமுடியும் என திட்டம் வகுத்து வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

அதன்படி, வைபை மூலமாக ரயில் நிலையங்களில் காத்திருக்கும் போது ரேடியோ மற்றும் வீடியோ சேவையை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், பயணிகளின் கட்டணம் தவிர்த்து ரயில்வே துறைக்கு பிற வருவாய் மூலம் வருமானம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .