ஒற்றுமையின் சிலை என்பதற்கு ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று தமிழ் மொழி மாற்றம் செய்திருப்பதற்கு பலர் கண்டனம் கூறி வருகின்றனர். தமிழ் தெரிந்த அதிகாரிகள் உடனிருந்தும் அவர்களிடம் கேட்டிருக்கலாமே என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்த நாளை, தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசி அறிவித்தது. குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

இந்தநிலையில், சர்தார் வல்லபாய் படேலின் சிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்டது இந்த சிலை. சிலை திறப்பு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திறக்கப்பட்ட சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த பலகையில் மிகவும் கேவலமாக தமிழை மொழிபெயர்த்துள்ளனர்.

சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ப்ரென்ச், ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது. அதாவது ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா என்று கூறிக் கொள்ளும் நிலையில், இந்த மொழி பெயர்ப்புக்கு பலர் கடுமையாக கூறி வருகின்றனர். என்னதான் மொழி தெரிந்திருந்தாலும், மொழி அறிந்தவர்களிடம் கேட்டிருக்கலாமே என்று பலர் கூறுகின்றனர்.

பிரதமர் மோடியின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த, நன்கு தமிழ் அறிந்த அதிகாரிகள் உள்ளனர். குறிப்பாக இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் சகோதரரும் உள்ளனர். அவரிடம் கேட்டிருந்தாலும், சரியான தமிழைக் கூறியிருப்பார்களே? என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.