பழைய 5௦௦,1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் பணத்தை வங்கியில் மாற்றவும், ஏடிஎம்களிலிருந்து பணத்தை எடுக்கவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து செல்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை எடுக்க ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வரிசையில் நிற்க வந்த திருநங்கை ஒருவரை பொதுமக்கள் வரிசையில் நிற்க கூடாது என கூறியதால், ஆத்திரமடைந்த அந்த திருநங்கை திடீரென அவர் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு வந்த பெண் காவலர்கள் அந்த திருநங்கையை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.

அப்போது, பொதுமக்கள் தன்னை வரிசையில் நிற்ககூடாது என திட்டியதால் மேல் சட்டையை கழற்றியதாக திருநங்கை தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த திருநங்கை காவலர்கள் பாதுகாப்புடன் அருகில் இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்து சென்றார்.

மக்கள் திரளாக கூடியிருந்த பொது இடத்தில் திருநங்கை ஒருவர் தனது சட்டையை கழற்றிய இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.