ரயில் பயணியை வெறித்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது !
ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள், பயணி மீது பயங்கர தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பயணியை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பீகார் மாநிலம், முசாபர்பூரில் பயணி ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வரும் இரண்டு ரயில் டிக்கெட் சேகரிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது என்றும், பயணிகளில் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?
பயணச்சீட்டு பரிசோதகர் பயணியை மேல் பெர்த்திலிருந்து கீழே இறக்க முற்படும்போது, பயணியின் காலைப் பிடித்துக்கொண்டு, அதிகாரியை உதைத்துத் தடுக்க முயன்றார். டிக்கெட் சேகரிப்பாளருடன் ஒரு சக ஊழியரும் சேர்ந்து, அவர்கள் அந்த நபரை தரையில் கீழே இழுத்து அவரை மோசமாக அடிக்கிறார்கள்.
தங்கள் பூட்ஸ் காலால் முகத்தில் உதைக்கிறார்கள். கடந்த ஜனவரி 2 ஆம் தேதி இரவு மும்பையில் இருந்து ஜெய்நகர் செல்லும் ரயிலில் தோலி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் வாக்குவாதம் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், இரண்டு டிக்கெட் பரிசோதகர்களையும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். பயணி ஒருவரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்