Asianet News TamilAsianet News Tamil

தொடரும் கனமழை... நிலச்சரிவு! எர்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில்...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Train services between  chennai to Ernakulam suspended till Saturday
Author
Ernakulam, First Published Aug 17, 2018, 5:03 PM IST

கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் கேரளாவின் சில இடங்களில் கனமழை பெய்து, அதனால் நிலச்சரிவு ஏற்படும் சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்நிலையில், எர்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Train services between  chennai to Ernakulam suspended till Saturday

 எர்ணாகுளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்குப் புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் , மக்களுக்காக டெலிகாம் நிறுவனங்கள் (ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஐடியா) மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios