வளைந்து நெளிந்து சாகசம் செய்யும் இளைஞன்.. நிலை தடுமாறி தலைக்குப்புற விழுந்த சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே
டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வாலிபர், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் வாகனத்தில் செல்லும் போது இதுபோன்று உயிருக்கு ஆபத்தான விபரீத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்றும் டெல்லி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க:இந்தியாவில் வேகமெடுக்கும் குரங்கு அம்மை... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!
சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ், ஸ்டண்ட் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடியோ வெளியிட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் இளைஞன் ஒருவன், சற்று நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சரிந்து விழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் எனும் தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:sarais:GST: மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளுக்கு (sarais) ஜிஎஸ்டி இல்லை: சிபிஐசி அறிவிப்பு
இந்த வீடியோவில் இளைஞன் ஒருவன் ஆபத்தான முறையில் தனது பைக்கை ஓட்டுகிறான். தனக்கு முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல முயல்கிறார். இது இன்னொரு நபரால் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்திலே, பைக் தனது கட்டுப்பாடை இழந்து, இளைஞர் நிலைதடுமாறி சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. இறுதியாக வீடியோவின் முடிவில் ஒரு போட்ட பிரேமிற்கு மாலை மாட்டி அவர் பைக் ஸ்டண்ட் பண்ணுவார் என்று வருகிறார். இதன் மூலம் ஆபத்தான ஸ்டண்ட், பைக் ரேஸ் போன்றவற்றின் மூலம் மரணம் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சாலை பயணம் குறித்து டெல்லி காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.