Asianet News TamilAsianet News Tamil

VIRAL VIDEO | ஆலப்புழாவில் லஞ்சம் வாங்க போலீஸ் உடையில் மிடுக்காக வந்த SI -கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்

ஆலப்புழாவில், டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற அனுமதிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் போது, போக்குவரத்து காவல் உதவி ஆய்வளார் கையும் களவுமாக பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Traffic police assistant inspector caught red-handed while taking bribe in Alappuzha!
Author
First Published Jun 15, 2023, 11:35 AM IST

ஆலப்புழாவில், டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற அனுமதிக்க ரூ.25000 லஞ்சம் வாங்கும் போது, போக்குவரத்து காவல் உதவி ஆய்வளார் கையும் களவுமாக பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட டெண்டர் எடுத்த நபரின் டாரஸ் லாரிகளுக்கு போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு லாரிகளுக்கும் 20000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களின் அபராதங்கள் ரத்து செய்வதோடு ஒரு மாதத்திற்கு அந்த டாரஸ் லாரிகள் அதிகபாரத்துடன் இயங்குவதற்கும் போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் எஸ் சதீஷ்குமார் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக டெண்டர் எடுத்த நபரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து டெண்டர் எடுத்த நபர் இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். லஞ்சம் வாங்க காவலர் உடையில் காவலர் வாகனத்தில் வந்து லஞ்சம் பெற்ற போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை, ஹாரிப்பாடு என்னும் பகுதியில் வைத்து அந்த நபரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை கையும் களவுமாக படித்தனர். அந்த இடத்திலேயே லஞ்ச பணத்தை ஆய்வு செய்து உறுதி செய்தனர்.

Coimbatore News: எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் யார்?

மேலும் இதில் ஆய்வாளர்களும் - உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவலும் கிடைத்துள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடிபட்ட சதீஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios