புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 19–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதலமைச்சர் நாராயணசாமி,

கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான்குமார் பெற்ற வாக்குகளை விட, தான் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது மக்கள் தனக்கு அளித்த பரிசு என தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக நாராயணசாமி நாளை பதவியேற்க உள்ளதாக சபாநாயகர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.