தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தமிழகதேசியநெடுஞ்சாலைகளில்உள்ளஅரசுமற்றும்தனியார்ஒத்துழைப்புடன்கூடியசுங்கச்சாவடிகளில்கடந்த 5 ஆண்டுகளில்வசூல்செய்யப்பட்டதொகைகுறித்துநாடாளுமன்றத்தில்அதிமுகஉறுப்பினர்கள்கேள்விஎழுப்பினர்.

இதுதொடர்பாகமக்களவையில், அதிமுக-வைச்சேர்ந்ததிருப்பூர்எம்பிசத்யபாமா , மயிலாடுதுறைஎம்பிபாரதிமோகன், திருவண்ணாமலைஎம்பிவனரோஜாஆகியோர்கூட்டாககேள்விஎழுப்பியிருந்தனர்.

அதிமுகஎம்.பி.க்களின்கேள்விக்குமத்தியபோக்குவரத்துமற்றும்நெடுஞ்சாலைத்துறைஇணைஅமைச்சர்மன்சுக்லால்மான்வியாபதிலளித்தார்.

அதில் கடந்தஐந்துஆண்டுகளில்தமிழகத்தில்தேசியநெடுஞ்சாலைகளில்அரசுமற்றும்தனியார்ஒத்துழைப்புடன்கூடியசுங்கச்சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடியே 30 லட்சம்ரூபாய்வசூலாகியிருப்பதாகதெரிவித்தார்.

சுங்கச் சாவடிகள் மட்டும் மூலமே இத்தனை கோடி வசூலா? என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய நாட்டின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு பெருமளவு இருக்கும்போது தமிழகத்திற்கான நலத்திட்டங்கள், கஜா புயல் நிவாரணம் என மத்திய அரசு குறைவாகவே ஒதுக்குவதை தமிழக கட்சிகள் தட்டிக் கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.