கடந்த 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இதனால் விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
எனவே, 24ம் தேதி வரை சுங்க கட்டணம் ரத்து, விமான நிலையங்களில் பார்க்கிங் இலவசம், வீடு மற்றும் கார் கடன் கட்ட கால அவகாசம் என மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியது.

இந்நிலையில், சுங்ககட்டணம் ரத்து என மத்திய அரசு அறிவித்தது இன்றுடன் நிறைவடைகிறது.
இதனை எதிர்த்து, லாரி உயிமையாளர்கள் இதுவரை போதுமான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வராததாலும், சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதாலும் சுங்க கட்டண வசூலை வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் இன்று முதல் லாரிகள் இயங்காது என என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இரவு 12 மணியுடன் சுங்க கட்டணம் ரத்து முடியவிருந்தநிலையில், டிசம்பர் 1ம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
