Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு நாளை கொடியேற்றம்… ஏழுமலையானை தரிசிக்க இவர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்….!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று அங்குரார்பணத்துடன் தொடங்கியிருக்கிறது.

Tirupati temple pramorchava fest begins - online booking must for dharsan
Author
Tirupati, First Published Oct 6, 2021, 9:26 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று அங்குரார்பணத்துடன் தொடங்கியிருக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழாவில் ஏழுமலையானை விரும்பியபடி தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Tirupati temple pramorchava fest begins - online booking must for dharsan

இந்தநிலையில் திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்று அங்குரார்பணத்துடன் தொடங்கியிருக்கிறது. நாளை மாலை 5.10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். இதனிடையே ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பிரமோற்சவ விழாவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து திருப்பதிக்கு செல்வார்கள். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் ஆன்லைன் டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது நாட்களுக்கு அதிகாலை 2 முதல் நள்ளிரவு 12 மணி வரை திருப்பதி மலைப்பாதையில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். பக்தர்களுக்கு தினமும் மூன்று லட்சம் லட்டுகள் விநியோகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 200 அரசு பேருந்துகளில் 20 ஆயிரம் பக்தர்கள் அழைத்துவரப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios