பகீர் கிளப்பிய திருப்பதி லட்டு விவகாரம்.. உடனே விரிவான அறிக்கை வேண்டும் - சுகாதார அமைச்சகம்!
Tirupati Laddoo : திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு செய்ய பயன்படும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளதாக பகீர் தகவல் வெளியானது.
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கேட்டுள்ளார். இந்த லட்டுகள் தான் கோயிலில் உள்ள தெய்வத்திற்கு 'பிரசாதமாகவும்' மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த விஷயத்தில் முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். "முதலமைச்சர் கூறியுள்ள இந்த விஷயம் மிகவும் கவலைக்குரிய விஷயம். உடனே இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை, மேலும் இந்த விஷயத்தில் ஈடுபட்ட குற்றவாளி உடனே தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்த வாரம் குஜராத்தில் அரசு நடத்தும் ஆய்வகத்தின் ஜூலை அறிக்கையை மேற்கோள் காட்டியது, அவரது போட்டியாளரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நெய்யின் மாதிரிகளில் மாட்டிறைச்சி மற்றும் மீன்களின் எண்ணெய் இருப்பதாகக் கூறியது. அதுமட்டுமல்ல அதில் பன்றி கொழுப்பு, இருந்ததகவும் கூறப்பட்டது.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது துணை முதல்வர், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர், ஜெகன் மோகன் ரெட்டி கோவிலையும், 'சனாதன தர்மத்தையும்' இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அமைச்சரும் தேசிய பொதுச் செயலாளருமான சஞ்சய் பாண்டி பேசும்போது "இது மன்னிக்க முடியாத பாவம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் லட்டு வழங்கும் கோவில் போர்டில், வேறு சில மதத்தை சேர்ந்தவர்கள் இருந்ததகவும், அதுவே லட்டு செய்ய பயன்படுத்திய நெயில் கலப்படம் செய்ய காரணம் என்றும் கூறியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் போர்டில் இருந்த பாஜக எம்பியான பானு பிரகாஷ் ரெட்டியும், திருமலை வெங்கடேஸ்வரா கோயிலையும் மாநிலத்தில் உள்ள பிறவற்றையும் நிர்வகிக்கும் அரசு அறக்கட்டளை - முன்னாள் முதல்வர் மீது காவல்துறையில் புகார் அளிக்கக் வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். இதற்கிடையில், இவை அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளாக டிடிடியின் தலைவராக இருந்த ராஜ்யசபா எம்பி ஒய்.வி.சுப்பா ரெட்டி, "தினமும் தெய்வத்திற்கு வழங்கப்படும் புனித உணவுகளிலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளிலும் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது" என்று கூறுவது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று" என்று கூறி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மூர்க்கத்தனமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் கோவிலின் புனிதத்தை கெடுத்து, கோடிக்கணக்கான பக்தர்களை பாதித்தவர் உண்மையில் சந்திரபாபு நாயுடு தான் என்றும் திரு. ரெட்டி சாடினார். இரண்டு முறை TTD தலைவராக பணியாற்றிய மற்றொரு தலைவரான கருணாகர் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தின் கூற்றுக்கள், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ளார்.
CM Yogi Adityanath: அரிய வகை புங்குனூர் பசுவை அரவணைத்து உணவு வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!