திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் இலவசமாக ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 30,000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்காக ஒதுக்கப்படும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் இலவசமாக ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 30,000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்காக ஒதுக்கப்படும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க, தினந்தோறும் 20,000 இலவச தரிசன டிக்கெட் திருப்பதியில் 3 இடங்களில் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 25 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இலவச தரிசனத்தில் கூடுதலாக 10,000 டிக்கெட்டுகள் என 30,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதத்தின் மூலம் தரிசனம் செய்யவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக 2 மணிநேரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.