டிக்டாக்கில் சாகசம் செய்ய நினைத்து சாவு... அற்பத்தனமாய்ப் போன இளைஞனின் வாழ்வு..!
டிக் டாக்கில் சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த மற்றும் கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிக் டாக்கில் சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த மற்றும் கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிக்-டாக் செயலி உலகமுழுவதும் இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் குமார் (19). இவர் இசை கச்சேரிகளில் நடனமாடி வருகிறார். நடனத்தில் வித்தியாசமான முறையை கையாண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனிடையே, ஏதாவது சகாசம் செய்து வீடியோ பதிவிட வேண்டும் என தீர்மானித்தார். அதன்படி, அவர் தனது நண்பரின் உதவியுடன் சாகசத்தில் ஈடுபட முயற்சித்தார். அதாவது, சிறிது தொலைவில் இருந்து ஓடிவரும் குமார் தனது நண்பரின் உதவியுடன் தரையில் கைகள் படாமல் பின்புறமாக பல்டி அடிக்க முயற்சித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தலை தரையில் போய் இடித்தது. இதனால் முதுகு, கழுத்து, கால் எலும்புகள் முறிந்தன. உடனே, அவரை மீட்ட நண்பர்கள் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதுகெலும்பு மற்றும் கழுத்து எலும்பு முழுவதையும் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் தற்போதைக்கு அவரினங நிலை குறித்து எதுவும் கூற முடியாது என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 9 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இளைஞர்கள் சகாசம் என்ற பெயரில் உயிரை பணயம் வைத்து வித்தியாசமாக வீடியோ பதிவேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.