Three years of Narendra Modi govt 10 charts that show where Indian economy stands
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறோம் என்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்துபிரசாரம் செய்து வருகிறது. ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையிலோ, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறை
மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் சார்பில் 2016-17ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் ‘வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்தது’ என்ற தலைப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அமைப்பு சார்ந்த துறைகள் மற்றும் அமைப்பு சாராத துறைகள், அரசு துறை, தனியார் துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்களை உள்ளடக்கி இந்த ஆய்வு எடுக்கப்பட்டது.
5 சதவீதம்
அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013-14ம் ஆண்டு இருக்கும்போது, 4.9 சதவீதம் வேலையின்மை இருந்த நிலையில், பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் 2015-16ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி பேச்சு
கடந்த 2013ம் ஆண்டு ஆக்ராவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “ கடந்த 10 ஆண்டுகளாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்குவோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
6 லட்சம்
கடந்த 2014 ஜூலை முதல் 2016 டிசம்பர் வரை, முக்கிய 8 துறைகளான உற்பத்தி, வர்த்தகம், கட்டுமானம், கல்வி, சுகாதாரம், தகவல்தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் ஓட்டல் துறை ஆகியவை மூலம் 6 லட்சத்து 41 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில்
இதில் 2016 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதே சமயம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2011 ஜூலை முதல் 2013 டிசம்பர் வரையிலான மாதங்களில் இந்த துறைகள் மூலம் 10 லட்சத்து 28 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நிரந்தர வேலைவாய்ப்பு முதல் ஒப்பந்த வேலைவாய்ப்பு வரை கணக்கிடப்பட்டது. இதில் 2014ம் ஆண்டுக்கு பின் தற்காலிக வேலைவாய்ப்பு என்பது அதிகரித்து, தொழிலாளர்களின் ஊதியம், வேலை உறுதித்தன்மை, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் வேலைவாய்ப்புதிட்டம்
2012-13ம் ஆண்டு பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்து இருந்தது. இதுவே பா.ஜனதா ஆட்சிக்கு பின் 2015-16ம் ஆண்டு 3 லட்சத்து 23 ஆயிரத்து 362 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை, ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 252 வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் ஆட்சியில், சிறு, குறு நிறுவனங்கள் உருவாக்க 15 ஆயிரத்து 768 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டன. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், வருவாயும் பெரும் என அரசு கருதியது.ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு எந்த விதமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கவில்லை, அது குறித்த தௌிவானகணக்கீடும் இல்லை.
பா.ஜனதா-காங்.
நாட்டில் உள்ள 8 முக்கியத்துறைகள் மூலம் பா.ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்தமாக 2016ம் ஆண்டு அக்டோபர் வரை 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் 20 லட்சத்து 47 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் 39 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
