Three terrorists were shot dead in a gunfight between two militant groups.

தீவிரவாத அமைப்பின் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய பழங்குடியினர் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கிடையே அடிக்கடி மோதல் வரும். அந்த வகையில், அவர்களுக்கு இடையே ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். 

இதைபார்த்த தீவிரவாத அமைப்பினர் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.