கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவாமி ராமசந்திரன். சட்ட கல்லூரி மாணவியான இவர், ஸ்டூடண்ட் ஃபெடரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பின் செயல்பாட்டாளராக உள்ளார். 

இடது சாரிகளுக்கு ஆதரவாக, நவாமி ராமசந்திரன் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் சமூகவலைத்தளத்தில் மாதவிடாய் குறித்து கவிதை ஒன்றை எழுதியிருந்தார்.

மாதவிடாய் குறித்து எழுதிய கவிதைக்கு, நவாமி ராமசந்திரனுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது குறித்து நவாமி கூறுகையில், முன்னதாக மாதவிடாய் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம் பெண் ஒருவரை ஆதரித்துதான் இந்த கவிதையை நான் எழுதினேன். தற்போது என்னை எதிர்ப்பவர்கள் பேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளி செல்லும் எனது சகோதரி லட்சுமியிடம், அடையாளம் தெரியாத கும்பல் மிரட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருக்குமோ என்ற எண்ணத் தோன்றுவதாக நவாமி ராமசந்திரன் கூறியுள்ளார்.