ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. 

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் மட்டுமே இடம்பெற்று வந்தது. தற்போது தேசத் தலைவா்கள் பிறரின் படத்தையும் ரூபாய் நோட்டில் பயன்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும். ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் மகாத்மாவின் படம் இடம்பெறுவது வழக்கம். இப்போது அந்த இடத்தில் வங்கக் கவிஞா் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மேலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தினை அச்சிட்டு வெளியிடுவதைப் போல் இனிவரும் காலாங்களில் புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் புகைப்படம் அச்சிட இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் பரிசீலனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியானது.

மேலும் இந்திய தேசிய கீதத்தினை எழுதியவரும் கவிதைக்காக நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாஹூரின் புகைப்படத்தையும் அச்சிட ஆர்.பி.ஐ.யும் மத்திய நிதி அமைச்சகமும் பரிசீலனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியானது. அதன் படி இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாஹூர் ஆகியோரின் படங்களை வாட்டர் மார்க் வடிவங்களில் அச்சிட, இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (SPMCIL) இரண்டு தனித்தனி மாதிரி ரூபாய் நோட்டுகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானியிடம் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளில் அரசின் பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்தி செய்யும் ஏதாவது ஒன்றினை அரசிடம் ஒப்படைக்கும் படி மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தகவலை மத்திய ரிசர்வு வங்கி மறுத்துள்ளது. இதுக்குறித்து ரிசர்வ் வங்கி பொது மேலாளர் யோகேஷ் டயால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக பிற தலைவர்களின் படத்தை ரூபாய் நோட்டுகளில் வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.