Asianet News TamilAsianet News Tamil

“மினிமம் பேலன்ஸ்” இல்லாத ஸ்டேட் வங்கிக் கணக்கு...! அபராதம் கிடையாது, பிடித்தம் கிடையாது…

There is no penalty and no favorite for State Bank Account Without Minimal Balance
There is no penalty and no favorite for State Bank Account Without Minimal Balance
Author
First Published Nov 22, 2017, 11:25 AM IST


வங்கிகணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும் அபராதம் வசூலிக்காமல் இருக்கும் வகையில் புதிய வங்கிக்கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒவ்வொரு வங்கியிலும் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்து இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். இதில் “ஜன்தன் வங்கிக்கணக்கு” தொடங்கியவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.300 முதல் ரூ.500வரை மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்டேட் வங்கிகளை பொருத்தவரை நகரங்களில் ரூ.5 ஆயிரம் குறைந்தபட்ச இருப்பாகவும், சிறு நகரங்களில் ரூ.  ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மாதந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள், முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுபவர்கள் பெரிதும் வேதனைப்படுகின்றனர். அவர்களுக்கு வருகின்ற பணத்தில் கனிசமாக குறைந்தபட்ச இருப்பில் நின்றுவிடுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றாலும் அபராதம் வசூலிக்காமல் இருக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்குத் தொடங்க விரும்புவோர், எஸ்பிஐ வங்கியின் எந்த கிளையிலும் எந்த வங்கிக் கணக்கும் இருக்கக் கூடாது. ஒரு வேளை ஒரு வாடிக்கையாளருக்கு எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்த கணக்கை முடித்துவிட்டு 30 நாட்களுக்குப் பிறகு இந்த கணக்கைத் தொடங்கலாம்.

இந்த சேமிப்பு கணக்கை தனிமனிதர் யாவரும் தொடங்கலாம். இந்த வங்கிக்கணக்கை தொடங்குபவர்களுக்கு, ரூபே ஏடிஎம் - டெபிட் கார்டு கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும். ஆண்டு பராமரிப்புக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

மேலும், இந்த சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்துக்கும், மற்ற வங்கிகளில் வழங்கப்படும் அதே வட்டிமுறை வழங்கப்படும். என்இஎப்டி அல்லது ஆர்.டி.ஜி.எஸ். வழியாக ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் இல்லை.

மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் காசோலைகள் , பிற வங்கிகளின் காசோலைகளுக்கு சேவைக் கட்டணம் கிடையாது. கணக்கை முடிக்கும் போது சர்வீஸ் கட்டணும் வசூலிக்கப்படாது.

இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ஏடிஎம்கள் மூலம் 4 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வங்கிக்கணக்கு அனைத்து எஸ்.பி.ஐ. வங்கிகளிலும் தொடங்கலாம் என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios