Asianet News TamilAsianet News Tamil

12-ம் வகுப்பில் கருணை மதிப்பெண் கிடையாது… மாணவ,மாணவிகள் தேர்ச்சி வீதம் குறையுமா?

there is no grace mark in plus-two exams corrections
there is-no-grace-mark-in-2-exams-paper-corrections
Author
First Published Apr 25, 2017, 4:47 PM IST


கல்லூரியில் சேரஅதிகமான கட்-ஆப் மதிப்பெண் பெறுவதைத் தடுக்கும் வகையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதை சி.பி.எஸ்.இ. அமைப்பு நீக்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ. வாரியத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில், அனைத்து கல்வித்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. 

சரியான மதிப்பெண்

இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் அதிகபட்சமான மதிப்பெண்கள் பாடங்களில் வழங்கக்கூடாது. மாறாக, கேள்வி ஒவ்வொன்றுக்கும், பதில் எப்படி எழுதப்பட்டு இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல், சரியான மதிப்பெண் வழங்கினாலே போதுமானது. கருணை மதிப்பெண் வழங்கக் கூடாது.

கருணை மதிப்பெண் என்பது ஒரு ஆலோசனைதான்.  எப்படி செயல்படுகிறது என்பது இனிமேல் பார்க்கலாம். மதிப்பெண் என்பது மிகத்துல்லியமாக இருக்க வேண்டும்.நியாயமான மதிப்பெண் அதிகரிக்க கூடாது, ஏனென்றால் அதிகமான போட்டி நிலவுகிறது.

அதிகவிலை

சில சி.பி.எஸ்.பி. பள்ளிகள் தனியாரின் சில புத்தகங்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகின்றன. நாங்கள் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை ஆய்வு செய்தபின், அது குறித்து தெளிவான முடிவு எடுப்போம். விலைகுறைவாக வாங்கக்கூடிய, நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. எந்த விதமான புத்தக கொள்ளையும் நடக்க கூடாது’’ எனத் தெரிவித்தார்.

தொடரும்

அதேசமயம், மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற சில மதிப்பெண்கள் தேவைப்படும் நிலையில், கருணை மதிப்பெண் அளிப்பது தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை நீக்கும் பட்சத்தில் கல்லூரிகளில் சேரும் போது வழங்கப்படும் கட்-ஆப் மதிப்பெண் அளவு குறையும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios