There is no controversy in Padmavath movie

பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கத்தில் பத்மாவதி திரைப்படம் உருவாக்கப்பட்ட கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று இந்தியா முழுக்க ரிலீஸ் செய்யப்படுகிறது. பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பத்மாவத் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நேற்று சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதனை வடமாநிலத்தவர் உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர்.

பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாகவும் படம் பார்த்தவர்கள் கூறினர். 

பத்மாவத் படத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சர்ச்சையான காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்று படம் பார்த்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.