Asianet News TamilAsianet News Tamil

Dharmendra Pradhan:மத்தியப் பல்கலைக்கழகங்களில் 11ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐஐடி, மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் 11ஆயிரம் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

There are over 11000 vacant faculty positions in central universities: Education Ministry
Author
First Published Dec 12, 2022, 4:40 PM IST

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐஐடி, மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் 11ஆயிரம் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

மோடி ஆட்சியில் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐஐடி, மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் 11ஆயிரம் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன மத்திய அரசுக்கு உட்பட்ட 45 பல்கலைக்கழகங்களில் 18,956 பணியிடங்களில்,  6 ஆயிரத்து 180 பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பதவியிடங்கள் காலயாக உள்ளன. 

ஐஐடியில் 11,170 பணியிடங்களில், 4,502 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. ஐஐஎம் கல்வி நிறவனத்தில் 1,566 பணியிடங்களில், 493 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை- யாழ்ப்பாணம் இடையே 3 ஆண்டுகளுக்குப்பின் பயணிகள் விமான சேவை தொடங்கியது

பணியிடங்கள் காலியாவதும் அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயல். மத்திய பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அமைப்புகள், அவை அந்தந்த மத்திய சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. அவர்களின் ஆட்சேர்ப்பு நடைமுறை அவர்களின் சட்டப்பூர்வ அமைப்புகளால், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு,  அதன் செயல்கள்,  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து கல்வி நிலையங்களிலும் காலியிடங்களை அறிந்து அவற்றை விரைவாக நிரப்புதற்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக மாதந்தோறும் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க தனியாக அமைப்பு ஏற்பட உள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் கிளையை உருவாக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்

மத்திய பல்கலைக்கழகங்கள், மற்றும் ஐஐஎம்களில், 961 பணியிடங்கள் பட்டியலினத்தவர்களுக்கும், 578 பணியிடங்கள் பழங்குடியினருக்கும், 1657 பணியிடங்கள் ஓபிசி பிரிவினருக்கும் இருக்கிறது. பொருளாதாரா ரீதியாக பின்தங்கியோருக்கு 643, மாற்றுத்திறனாளிகளுக்கு 301 பணியிடங்களும் உள்ளன

இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios