தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் சீருடையில் இருந்த காவலரை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள சார் பாக் ரயில் சார்பார்க் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தனர்.அவர்களில் பெண் பயணிகள் சிலரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே மதுபோதையில் காவலர் ஒருவர் வந்துள்ளார். அவர் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரிடம் தவறுதலாக நடந்து கொள்ள முற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் பெண் ஒருவருக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த காவலர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாற தனது செருப்பை கழட்டி காவலரை அடித்துள்ளார் அந்த பெண். தன்னிடம் அந்த காவலர் தவறாக நடந்து கொண்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். பெண் செருப்பால் அடித்ததும், காவலர் மூர்க்கத்தனமாக அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

Scroll to load tweet…

இந்த சம்பவம் சுற்றிலும் பல பயணிகள் இருக்கும்போது நிகழ்ந்துள்ளது. அவர்களில் ஒருவர் வீடியோவாக சம்பவத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கடும் விமர்சனங்களை சந்துள்ள இந்த வீடியோவை “இந்த வீடியோ லக்னோவின் சார் பாக் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு இரண்டும் ஒரே காணொளியில்” என்று குறிப்பிட்டு பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.