ugc: fake 21 universities: கவனம் மாணவர்களே! போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
நாடுமுழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானது. இந்த பல்கலைக்கழகங்களால் எந்தவிதமான பட்டப்படிப்பையும் வழங்க முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானது. இந்த பல்கலைக்கழகங்களால் எந்தவிதமான பட்டப்படிப்பையும் வழங்க முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தெரிவித்துள்ளது.
இந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் அதிகமாக உள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜனிஷ் ஜெயின் அளித்த பேட்டியில் கூறியதாவது
காலியாகிறதா காங்கிரஸ் கூடாரம்! வெளியேறிய 7-வது பெரிய தலைவர் குலாம் நபி ஆசாத்: இதுவரை எத்தனை பேர்?
“ நாட்டில் குறைந்தபட்சம் 21 பல்கலைக்கழகங்கள், யுஜிசி அங்கீகாரம் பெறதவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்கள் இன்னும் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் போலியானவை, அவற்றால் மாணவர்களுக்கு எந்தவிதமான பட்டமும், சான்றிதழும் வழங்கிட முடியாது.
டெல்லியில் மட்டும் 8 போலிப் பல்கலைக்கழகங்களும், உத்தரப்பிரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்களும் உள்ளன. இது தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், கேரளாவில் போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
புதிய கட்சியா? பாஜகவில் சேர்வாரா குலாம் நபி ஆசாத்? வலைவிரிப்பு தொடங்கியது
இதில் டெல்லியில், ஆல் இந்தியா இன்ஸ்டியூட் ஆப் பப்ளிக் அன்ட் பிசிக்கல் ஹெல்த் சயின்ஸ், கர்மஷியல் யுனிவர்சிட்டி லிமிட், யுனெடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வகேஷனல் யுனிவர்சிட்டி, அடிஆர் சென்ட்ரிக் ஜூடியல் யுனிவர்சிட்டி, இந்தியன் இன்ஸ்டியூஷன் சயின்ஸ் அன்ட் எஞ்சினிரிங், விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி, ஆத்யாத்மிக் விஸ்வாவித்யாலயா யுனிவர்சிட்டி உள்ளன.
காங்கிரஸிலிருந்து வெளியேற ராகுல் காந்தியே காரணம்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஹிந்தி வித்யாபீடம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, பாரதிய சிக்ஸா பரிஷத் ஆகியவை போலியானவை”
இவ்வாறு ரஜினிஷ் தெரிவித்தார்