Asianet News TamilAsianet News Tamil

Bank Holidays : மக்களே உஷார்...! இன்று முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு லீவ்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!

இன்று முதல் வங்கிகளுக்கு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

The Reserve Bank of India has announced a six day holiday for banks from today
Author
India, First Published Jan 18, 2022, 11:29 AM IST

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மாநில வாரியான விடுமுறை, மதம் சார்ந்த விடுமுறைகள் மற்றும் பண்டிகை விடுமுறைகள். இதில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கியமான பண்டிகைக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது, மற்ற பெரும்பாலான விடுமுறைகள் மாநில வாரியான விடுமுறைகள் தான்.வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. 

The Reserve Bank of India has announced a six day holiday for banks from today

அந்த வகையில் நாளை முதல் வங்கிகளுக்கு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆறு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜனவரி 18 – தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22 – நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 23 – ஞாயிறு விடுமுறை

ஜனவரி 25 – இமாசலப் பிரதேச மாநிலம் உருவான நாள்

ஜனவரி 26 – குடியரசு தினவிழா

ஜனவரி 31 – அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை

The Reserve Bank of India has announced a six day holiday for banks from today

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சில தினங்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்  6 நாட்களுக்கு விடுமுறை வருவதால்,  வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இதனால் தேவையற்ற அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios