Asianet News TamilAsianet News Tamil

#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..!

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு. தற்போது இந்த பாலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

The rebuilt bridge over the Chinese border in 5 days
Author
Uttarakhand, First Published Jun 30, 2020, 11:28 AM IST

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு. தற்போது இந்த பாலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. The rebuilt bridge over the Chinese border in 5 days
 
சீன எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த பாலம் முன்ஸ்யாரி –மிலம் செல்லும்  வழியில் அமைந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி கனரக லாரி ஒன்று பொருளுடன் இந்த பாலத்தை கடக்க முயன்ற போது  அதிக எடையால் இந்தப்பாலம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’பொதுவாக இத்தகைய பாலங்களை கட்ட ஒரு மாத காலம் ஆகலாம். ஆனால், இது எல்லையோரம் அமைந்துள்ள முக்கியமான வழித்தடம் என்பதால் விரைந்த கட்டி முடித்தோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த பாலம் தற்போது முன்பு இருந்ததை விட இரட்டிப்பு வலிமை மற்றும் சுமை தாங்கும் திறனுடன் கட்டப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios