கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்குத் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை தேசிய விசாரணை முகமை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்குத் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை தேசிய விசாரணை முகமை வெளியிட்டுள்ளது.

இந்த 4 பேர் தொடர்பாக தகவல் தெரிவிப்போருக்கு ரூ.14 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தேசிய விசாரணை முகமை அறிவித்துள்ளது.

நிலக்கரி ஊழல்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன்

இதன்படி, சுலையா தாலுகாவைச் சேர்ந்த பல்லாரே கிராமத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்ற முஸ்தபா பைஜாரு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்படும். மடிகேரியைச் சேர்ந்த கடிக் மசூதியைச் சேர்ந்த எம்ஹெச் துபைல் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.

செக் கார் தயாரிப்பாளருக்கான உலகளாவிய சந்தையாகும் இந்தியா… சீனாவை பின்னுக்கு தள்ளி அசத்தல்!!

சுலையா நகரில் உள்ள கல்லுமுட்லு மனே பகுதியைச் சேர்ந்த எம்ஆர் உமர் பரூக் பற்றி தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசும், சுலையா பகுதியில் உள்ள பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் சித்திக் என்ற குஜுரு சித்திக் குறித்து தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.

பாஜக யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்திவிட்டனர் இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Scroll to load tweet…

கடந்த ஜூலை 26ம் தேதி கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடாவில் உள்ள பெல்லாரே கிராமத்தில் புட்டூர்-சுலையா சாலையில் சிக்கன் கடை அருகே, பைக்கில் வந்த 3 பேர் பிரவீன் நெட்டாருவை கொலை செய்து தப்பினார்கள்.

பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற மான்கார் தாம் பழங்குடியினர் - நினைவுச்சின்னமாக அறிவித்தார் பிரதமர் மோடி !!

இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்படுவதற்கு முன்பாக, போலீஸார் 6 பேரைக் கைது செய்திருந்தனர். என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்பட்டபின், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 33 இடங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இது தவிர என்ஐஏ அமைப்பு உதவி எண்களையும்யும், மின்அஞ்சலையும் வெளியிட்டுள்ளது. குற்றவாளிகள் 4பேர் குறித்து தகவல் அறிந்தவர்கள் 080-29510900, 8904241100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். info.blr.nia@gov.in என்ற மின்அஞ்சலுக்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் விவரங்கள் பாதுகாக்கப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது