the new two colors votes application for president election by Indian election commission
ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள்வாக்களிக்க பச்சை நிறை வாக்குச்சீட்டும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க ‘பிங்க்’(இளஞ்சிவப்பு) வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 24-ந் தேதியோடு முடிகிறது. இதையடுத்து, புதிய குடியரசு தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 14-ந் தேதி முதல் வரும் 28ந் தேதிவரை வேட்புமனுத் தாக்கலும், 30-ந் தேதி மனு பரிசீலனையும் நடக்கும்.
தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தலும், 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், எதிர்க்கட்சிகளோ மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை பார்த்துவிட்டு தாங்கள் முடிவு எடுக்கலாம் என காத்திருக்கின்றன.
குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடுகிறார்களா? அதாவது, பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டபின், ஜூலை 1-ந் தேதிக்கு பின் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.களின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால், எம்.எல்.ஏ.க்களின் வாக்குமதிப்பு, மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் மாறுபடும். ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 மதிப்பிலான வாக்குகள் பதிவாக உள்ளன.
இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 896 எம்.எல்.ஏ.க்களும், 776 எம்.பி.களும் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 233 எம்.பி.கள் மாநிலங்கள் அவையிலும், 543 எம்.பி.க்கள் மக்களவையிலும் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையை தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளன.
இது குறித்து தேர்தல் ஆணையம் வௌியிட்ட அறிவிப்பில், “ நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் உறுப்பினர்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச்சீட்டும், மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க பிங்க் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும்.
வாக்குச்சீட்டில் உள்ள பெயர்கள் இந்தி, ஆங்கிலத்திலும், சில மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருக்கும்.
மேலும், தேர்தலில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் போது, பயன்படுத்த பேனாக்கள் பிரத்யேகமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையம் தனித்தனியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் பேனா அளிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ‘மை’ பிரத்யேகமானதாக இருக்கும். வாக்களிப்பவர்கள் ேவறுஎந்த பேனாவையும் பயன்படுத் கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
