மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் முட்டை கோஸில் இருந்த பாம்புக் குட்டியை அறுத்து, சமைத்து சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்தூரில் உள்ளஅரசு மருத்துவமனையின் மருத்துவர் தர்மேந்திரா ஜன்வர் கூறியதாவது-

இந்தூரைச் சேர்ந்தவர் அப்ஜான் இமாம்(வயது35), அவரின் மகள் அமானா(வயது15). இருவரும் நேற்றுமுன்தினம், இரவு சமையல் செய்து சாப்பிட்டனர். அப்போது முட்டைக்கோஸில் இருந்த பாம்புக் குட்டியையும் முட்டைகோஸூடன் அறுத்து சமைத்து சாப்பிட்டனர். சாப்பிட்டபின் மீதம் இருந்த முட்டை கோஸை இருவரும் பார்த்தபோது, அதில் பாம்புக்குட்டி இருப்பதைக் கண்டு இருவரும் பதற்றம் அடைந்துள்ளனர்.

உடனடியாக இருவரும் மருந்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விவரத்தை கூறி சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, விஷமுறிவு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. இருவரும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உடலில் பாம்பு விஷத்தால் ஏதேனும்மாற்றம் ஏற்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.