தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய அரசின் முக்கிய குறிக்கோள் என பட்ஜெட்டில் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். அதன் படி, 2024-ம் ஆண்டு, ஒவ்வொரு வீட்டிலும் தங்குதடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க குழாய் அமைத்து தரப்படும். ஊரக பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், விவாசய துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதற்கு மத்திய அரசு ஊக்கமளிக்கும். இதற்காக பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.